ஜெய்ப்பூர் – மும்பை பயணித்த ரெயிலில் 4 பயணிகளை சுட்டுக்கொண்ட பாதுகாப்புப்படை வீரர்

ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி பயணிகள் ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த ரெயிலில் பாதுகாப்பு பணியில் ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்த ரெயில் மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் ரெயில்நிலையம் வரும்போது ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர் ஒருவர், அவருடைய தானியங்கி துப்பாக்கி மூலம் மற்றொரு ஆர்.பி.எஃப் வீரரை சுட்டுள்ளார். அதோடு மேலும் 3 ரெயில் பயணிகளையும் சுட்டுள்ளார்.

இதில் நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் நடைபெற்ற ரெயில் நிலையம் மும்பையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ளது.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools
Tags: tamil news