டாக்கா பிரிமீரியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஹனுமா விஹாரி

ஐ.பி.எல். தொடரின் 2022 சீசன் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான ஏலத்தில் இந்தியாவின் பல வீரர்கள் ஏலம் எடுக்கப்படவில்லை. அவர்களில் ஒருவர் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விளையாடும் ஹனுமா விஹாரி.

இவர் நேற்று முன் தினம் முடிவடைந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தார். இந்த நிலையில் வங்காளதேசத்தில் நடைபெறும் டாக்கா பிரிமீயர் லீக் ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறார். இவருடம் மேலும் பல இந்திய வீரர்கள் விளையாட இருக்கிறார்கள்.

நேற்றுதான் சர்வதேச போட்டியில் விளையாடி முடித்துள்ள ஹனுமா விஹாரி ஒன்றிரண்டு நாட்கள் ஓய்வு எடுத்தபின், டாக்கா பிரிமீயர் லீக்கில் விளையாடுவார்.

ஹனுமா விஹாரியுடன் பெங்கால் அணி கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன், பர்வேஸ் ரசூல், பாபா அபராஜித், அசோக் மெனாரியா, சிராக் ஜானி, குரிந்தர் சிங் போன்றோரும் விளையாட இருக்கிறார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools