டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் ஜூலை 5 ஆம் தேதி தொடங்குகிறது

தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) தலைவர் சஞ்சய் கும்பட் மற்றும் நிர்வாகிகள் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

டி.என்.பி.எல். 8-வது கிரிக்கெட் போட்டித் தொடர் ஜூலை 5-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை, சேலம், கோவை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 5 இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது.

லீக் போட்டிகள் ஜூலை 5-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சேலத்திலும், ஜூலை 13-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை கோவையிலும், ஜூலை 20-ந்தேதி முதல் 24-ந் தேதி வரை நெல்லையிலும், ஜூலை 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை திண்டுக்கல்லிலும் நடைபெற உள்ளன.

குவாலிபையர் 1, எலிமினேட்டர் போட்டிகள் ஜூலை 30 மற்றும் 31-ந் தேதி திண்டுக்கலில் நடக்கிறது. 2-வது குவாலிபையர் மற்றும் இறுதிப்போட்டிகள் ஆகஸ்டு 2 மற்றும் 4-ந் தேதிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு போட்டிகள் தொடங்கும். இரண்டு போட்டிகள் நடக்கும் சமயத்தில் மதியம் 3.15 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.

இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், எஸ்.கே.எம். சேலம் ஸ்பார்ட்டன்ஸ் சீகம், மதுரை பேந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools