டி20 உலகக் கோப்பை தொடர் – பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ராஃப் விளையாடுவது சந்தேகம்

டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரை அமெரிக்கா மற்றும் கனடா இணைந்து நடத்துகின்றன. 2024 உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரஃப் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் கலாண்டர்ஸ் அணிக்காக விளையாடும் போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.

காயம் சரியாக குறைந்தது 4 முதல் 6 வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிஎஸ்எல் சீசனின் எஞ்சிய ஆட்டத்தையும் ஜூன் 2-ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பையையும் அவர் இழக்க நேரிடும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools