டி20 உலக கோப்பை கிரிக்கெட் – யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த ஸ்டாய்னிசின்

டி20 உலகக்கோப்பை 19-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும் ஆசிய சாம்பியன் இலங்கையும் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. அதை தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆடியது.

ஸ்டாய்னிசின் அதிரடி ஆட்டத்தால் 16.3 ஓவரிலேயே ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஸ்டாய்னிஸ் தேர்வு செய்யப்பட்டார். இப்போட்டியில் 17 பந்துகளில் அரை சதமடித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரை சதமடித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தார்.

1. மார்கஸ் ஸ்டாய்னிஸ்: 17 பந்துகள், இலங்கைக்கு எதிராக, 2022

2. டேவிட் வார்னர்: 18, பந்துகள், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2010

3. கிளன் மேக்ஸ்வெல் : 18 பந்துகள் பாகிஸ்தானுக்கு எதிராக, 2014 அத்துடன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த ஒட்டுமொத்த பட்டியலில் 2-வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

1. யுவராஜ் சிங் : 12 பந்துகள், இங்கிலாந்துக்கு எதிராக, 2007

2. மார்கஸ் ஸ்டோனிஸ் : 17 பந்துகள், இலங்கைக்கு எதிராக, 2022

3. ஸ்டீபன் மைபர்க் : 17, அயர்லாந்துக்கு எதிராக, 2014

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools