டி20 உலக கோப்பை கிரிக்கெட் – நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஜோஸ் பட்லர் ,அலெக்ஸ் ஹாலெஸ் அதிரடியாக விளையாடினார். அரை சதம் அடித்த அலெக்ஸ் 52 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். தொடர்ந்து அதிரடி காட்டிய ஜோஸ் பட்லர் 47 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். அந்த அணியி மொயீன் அலி 5 ரன்னும் , லியாம் லிவிங்ஸ்டன் 20 ரன்னும் ,ஹார்ரி புரூக் 7 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் அடித்தது.

180 ரன்கள் இலக்கை நோக்கி பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணியின் பின் ஆலன் 16 ரன்னும், கான்வே 3 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். கேப்டன் வில்லிம்சன் 40 ரன்கள் எடுத்தார். சிறப்பாக விளையாடிய பிலிப்ஸ் 36 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனர். மிட்செல் சான்ட்னர் 16 ரன் அடித்த நிலையில் களத்தில் இருந்தார். நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள்அடித்தது. இதையடுத்த 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools