டி20 கிரிக்கெட் போட்டியில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய 4 வது வீரர் ஜேசன் ஹோல்டர்

வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதிய 5-வது டி20 போட்டி பார்படாசில் நடைபெற்றது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. பொல்லார்டு 41 ரன்னும், பாவெல் 35 ரன்னும் எடுத்தனர்.

அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜேம்ஸ் வின்ஸ் 55 ரன்னிலும், சாம் பில்லிங்ஸ் 41 ரன்னிலும் அவுட்டாகினர். ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஜேசன் ஹோல்டர் 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என டி20 தொடரை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 5 விக்கெட்டும், ஹொசைன் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்நிலையில், டி20 போட்டிகளில் 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய நான்காவது வீரர் ஜேசன் ஹோல்டர் ஆவார்.

இவருக்கு முன்னதாக, அயர்லாந்தின் காம்பெர், இலங்கையின் லசித் மலிங்கா மற்றும் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் ஆகியோர் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools