டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கோளாறு – அவசரமாக தரை இறக்கப்பட்டது

டெல்லியில் இருந்து 137 பயணிகளுடன் இன்று சென்னைக்கு ஏர் ஏசியா விமானம் வந்துகொண்டிருந்தது. சென்னை விமான நிலையத்தை நெருங்கியபோது விமானத்தின் பிரேக் பிடிப்பதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனைக் கவனித்த விமானி, சென்னை விமான நிலையத்தை தொடர்புகொண்டு அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார்.

அனுமதி கிடைத்ததும் விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே, சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. முன்கூட்டியே கோளாறு கண்டறியப்பட்டதால், விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news