டெல்லியில் மம்தா பானர்ஜியை சந்தித்த சரத் பவார்

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முயற்சியில் அனைத்துக் கட்சிகளும் களமிறங்கி உள்ளன. தலைநகர் டெல்லியில் நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் ஒன்றுகூடி ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே, திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்குவங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி தி.மு.க. உள்ளிட்ட மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளைச் சேர்ந்த 22 தலைவர்களுக்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார். அவரும் தனது கடிதத்தில் ஜூன் 15-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி இன்று டெல்லி சென்றடைந்தார். அங்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இருவரது சந்திப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools