டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணி அளவில் காணொலி வாயிலாக நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

அதன்படி, மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக தொடங்கியது.

இக்கூட்டத்தில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கூட்டத்திற்கு பிறகு விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools