டோக்கியோ ஒலிம்பிக் – தடகள அணியில் உள்ள இந்திய வீரர்கள் விவரம்

ஆண்கள் 400 மீட்டர் தடை ஓட்டம்

எம்.பி. ஜபீர்

கேரளாவை சேர்ந்த எம்.பி. ஜபீர் 1996 ஜூன் 8-ம் தேதி பிறந்தார். இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டம் பிரிவில் பங்கேற்கிறார். 400 மீட்டர் தடை ஓட்டம் ஆண்கள் பிரிவில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் இந்திய வீரர் எம்.பி. ஜபீர் ஆவார். 25 வயதான ஜபீர் இந்திய கடற்படையில் பணியாற்றியுள்ளார். 2017 மற்றும் 2019 ஆண்டு நடைபெற்ற ஆசியன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டம் பிரிவில் ஜபீர் 2 முறை வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

ஆண்கள் 4×400 மீ தொடர் ஓட்டம்

முகமது அனாஸ் யாஹியா

கேரளாவை சேர்ந்த முகமது அனாஸ் யாஹியா 1994 செப்டம்பர் 17-ல் பிறந்தார். 26 வயதான முகமது அனாஸ் யாஹியா ஆண்கள் 4×400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் தகுதி பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியன் விளையாட்டு போட்டியில் அனாஸ் 3 வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 400 மீட்டர் ஓட்டம், 4×400 மீட்டர் ஆண்கள் தொடர் ஓட்டம், 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டம் ஆகிய மூன்று பிரிவுகளில் வெற்றிபெற்று வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார். ஒலிம்பிக்கில் ஆண்கள் 4×400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் முகமது அனாஸ் யாஹியாவுடன் இணைந்து நோஹா நிர்மல் டாம், அமோஜ் ஜேக்கப் மற்றும் ஆரோக்கிய ராஜீவ் ஆகியோர்
பங்கேற்கின்றனர்.

நோஹா நிர்மல் டாம்

நோஹா நிர்மல் டாம் கேரளாவை சேர்ந்தவர். இவர் 1994 நவம்பர் 13 ஆம் தேதி பிறந்தார். 26 வயதான நோஹா நிர்மல் டாம் ஒலிம்பிக்கில் ஆண்கள் 4×400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் பங்கேற்கிறார். இவருடன் முகமது அனாஸ் யாஹியா, அமோஜ் ஜேக்கப் மற்றும் ஆரோக்கிய ராஜீவ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

அமோஜ் ஜேக்கப்

அமோஜ் ஜேக்கப் 1998 மே 2 ஆம் தேதி பிறந்தார். 23 வயதான ஜேக்கப் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் 4×400 மீட்டர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். டெல்லியை சேர்ந்த ஜேக்கப்  ஒலிம்பிக்கில் ஆண்கள் 4×400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் பங்கேற்கிறார். இவருடன் முகமது அனாஸ் யாஹியா, நோஹா நிர்மல் டாம் மற்றும் ஆரோக்கிய ராஜீவ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

ஆரோக்கிய ராஜீவ்

ஆரோக்கிய ராஜீவ் தமிழ்நாட்டின் திருச்சியை சேர்ந்தவர். இவர் 1999 மே 22-ம் தேதி பிறந்தார். 30 வயதான ராஜீவ்  ஒலிம்பிக்கில் ஆண்கள் 4×400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் தகுதி பெற்றுள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர் 2017 ஆசியன் சாம்பியன்ஷிப் மற்றும் 2018 ஆசியன் விளையாட்டில் 4×400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக் 4×400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் ஆரோக்கிய ராஜீவ் உடன் அமோஜ் ஜேக்கப், முகமது அனாஸ் யாஹியா, நோஹா நிர்மல் டாம்  ஆகியோர் பங்கேற்கின்றனர்.

ஆண்கள் 20 கிலோ மீட்டர் நடை ஓட்டம்

ராகுல் ரோஹிலா

ராகுல் ரோஹிலா அரியானா மாநிலத்தை சேர்ந்தவர். 24 வயதான ராகுல் ரோஹிலா தேசிய ஓபன் நடை ஓட்டம் (20 கிலோ மீட்டர்) போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். தேசிய ஓபன் நடை ஓட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்ததன் மூலம் ராகுல் ரோஹிலா டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் 20 கிலோ மீட்டர் நடை ஓட்டம் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare