டோனியைப் போல இருக்க விரும்புகிறேன் – டேவிட் மில்லர் விருப்பம்

தென்ஆப்பிரிக்கா அணியின் இடது கை அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர். இவர் கடந்த 8 ஆண்டுகளாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்தார். இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.

எம்.எஸ். டோனி சிறந்த பினிஷராக இருப்பதுபோல் தானும் இருக்க விரும்புகிறேன் என்று டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.

டேவிட் மில்லர் இதுகுறித்து கூறுகையில் ‘‘டோனி அவரது வேலையை எப்படி செய்து முடிக்கிறாரோ அதே வழியில் நானும் செல்ல விரும்புகிறேன். அவர் அமைதியாக இருப்பது, அவர் எப்போதும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார் என்று நினைக்க தோன்றோம்.

அவர் தன்னை சித்திரிக்கும் விதம், மிகவும் சிறந்தது. அவரைப் போன்று நானும் விரும்பி செயல்படுவேன். அதே எனர்ஜியை வெளிப்படுத்த முயற்சி செய்வேன். டோனி அவருடைய பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்து வைத்து அதற்கு ஏற்ப செயல்படுகிறார். நானும் அதை செய்வேன். அவரைப்போன்று பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை விட, அவரின் சில சேஸிங்கை கண்டு வியப்படைகிறேன். அவரைப் போன்று போட்டியை பினிஷ் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools