தமிழகத்திற்கு தக்காளி ஏற்றுமதி நிறுத்தம் – விலை உயரும் அபாயம்

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகம், கர்நாடகா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு தக்காளி விளைச்சல் அமோகமாக இருந்தது. இந்த ஆண்டு சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தக்காளி பயிர்கள் வாடி பழங்கள் உருவாகாமல் பிஞ்சிலேயே உதிர்கின்றன.

இதன் காரணமாக தக்காளி விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள பெரிய மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் மொத்த விலையில் கிலோ ரூ.40 முதல் 50 வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
மிகப்பெரிய தக்காளி மார்க்கெட்டான மதனப்பள்ளிக்கு குறைந்த அளவிலேயே தக்காளி வரத்து உள்ளது. உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே தற்போது தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தமிழ்நாடு பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள வேலூர், திருவள்ளூர், சென்னை ஆகிய பகுதிகளில் தக்காளி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது வேலூரில் தக்காளி கிலோ ரூ. 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து ஏற்றுமதி முழுவதுமாக நிறுத்தப்பட்டால் தக்காளி விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools