சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் தினமும் ஏராளமானோர் டெங்குவால் பாதிக்கபப்ட்டு வருகின்றனர். எனவே, தமிழக அரசு கவனம் செலுத்தி டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு உள்ளது.
40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம், இந்தியாவை காப்போம் என சொல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலில் தமிழ்நாட்டை காக்க வேண்டும். தமிழ்நாட்டில் கொடுத்த வாக்குறுதிகளை முதலில் அவர் நிறைவேற்ற வேண்டும். பா.ஜ.க அதிமுக கூட்டணி முறிவுக்கு இரண்டு கட்சிகளும் தான் காரணம். அவர்களுடைய கூட்டணி முறிவுக்கு தேமுதிக-விற்கு எந்த பங்கும் கிடையாது. இதேபோல பா.ஜ.க ஆட்சியில் தமிழகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்படவில்லை. தமிழகத்திற்கு பா.ஜ.க எந்த நன்மையும் செய்யவில்லை. அடுத்த 3 மாதத்திற்குள் கூட்டணி குறித்த முடிவை எடுத்துவிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.





