X

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பு பணி, வளர்ச்சி பணி குறித்து ஆலோசித்த பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

* தமிழகத்தில் 28 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகம்.

* தமிழகத்தில் இதுவரை 2.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

* திண்டுக்கல்லில் சிறப்பு குறைதீர்ப்பு திட்டம் மூலம் 9,105 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

* திண்டுக்கல் மக்களின் நீண்டநாள் கனவான மருத்துவக் கல்லூரி விரைவில் அமைய உள்ளது.

* திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு குறைதீர்ப்பு திட்டம் மூலம் 3 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

* உலக முதலீட்டாளர் மாநாடு ஒப்பந்தம் மூலம் திண்டுக்கல்லில் 400 பேருக்கு வேலை வழங்கும் வகையில் தொழில் தொடக்கம்

* 2019 முதலீட்டாளர் மாநாடு மூலம் 3 நிறுவனங்கள் ரூ.300 கோடியில் திண்டுக்கல்லில் தொழில் தொடங்க உள்ளன

* தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்; அதில் மாற்றமில்லை

* இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்த மாவட்டங்களில் கூடுதலாக ஒரு குழு என 2 குழு அமைப்பு

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்,

எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார்; வழக்கு என வந்தால் ஒளிந்து கொள்வார். எங்களுக்கு இந்தி தெரியும் என எஸ்.வி.சேகருக்கு எப்படி தெரியும்? அவர் முதலில் எந்த கட்சி? என்றும், பாஜகவை விட்டு நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.