தமிழக அமைச்சர்கள் மீதான வழக்கின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்தது

தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து பதிவு செய்ததற்கு எதிராக அமைச்சர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசுவின் மேல்முறையீடு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, தலைமை நீதிபதி முன் அனுமதி இல்லாமல் தனி நீதிபதி வழக்கு பதிவு செய்து உத்தரவிட்டதாக, தலைமை பதிவாளர் ஜோதிராமன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மேலும், தனி நீதிபதி தானாக வந்து வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் குழப்பத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் என்றும், நீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு செய்யும் வழக்குகளை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் எனவும் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சங்வி தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதியின் ஒப்புதலை தனி நீதிபதி பெற்றுள்ளார் என பதிவாளர் ஜோதிராமன் தரப்பு வழக்கறிஞர் ராகேஷ் திவேதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தானாக முன்வந்து பதிவு செய்த வழக்குகள் இறுதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ள சூழலில் என்ன சிக்கல் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பலாமா? அமைச்சர்களுக்கு எதிராக தானாக, தனி நீதிபதி முன்வந்து வழக்கு பதிவு செய்வதற்கு முன் தலைமை நீதிபதியிடம் கேட்டிருக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு, தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு விசாரணையில் கருத்து கொள்ள கூடாது. தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளை யார் விசாரிப்பது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news