தமிழக அரசுஇன் புதிய கல்விக் கொள்ளையை வடிவமைக்க வல்லுநர் குழு அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர், வல்லுநர் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் புதிய கல்விக்கொள்கைக்கான குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

12 பேர் கொண்ட அந்த குழுவில் உறுப்பினர்களாக பேராசிரியர்கள் எல்.ஜவஹர்நேசன், ராமானுஜம், சுல்தான் இஸ்மாயில், ராம சீனுவாசன், முனைவர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்பட 12 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலத்திற்கான தனித்துவமான கல்வி கொள்கை ஒன்றை இந்த குழு உருவாக்கும் என்றும் மாநில கல்வி கொள்கை குழு, புதிய கல்வி கொள்கையை வடிவமைத்து, ஓராண்டுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools