தளபதி 68 படத்தின் டைடில் போஸ்டர் ஜூன் 22 ஆம் தேதி வெளியாகிறது

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68- வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 -ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

இதையடுத்து இப்படம் குறித்த பல தகவல்கள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் விஜய்க்கு வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளதாகவும் இது குறித்து அவரிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், தளபதி 68 படத்தின் டைட்டில் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22- ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools