திண்டுக்கல்லில் இன்று திமுக பொதுக்கூட்டம் – மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

மதுரையில் இருந்து கார் மூலம் மாலை 5.30 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட எல்லையான சின்னாளபட்டி பூஞ்சோலை பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு பொதுமக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

அதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு திண்டுக்கல் மணிக்கூண்டில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகளும்

அதனைத் தொடர்ந்து வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் முன்பு நடக்கும் பிரசார கூட்டத்தில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

அதன் பின் தேனி மாவட்டத்திற்கு செல்லும் மு.க.ஸ்டாலின் நாளை அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news