திமுக அரசைக் கண்டித்து மாநில தலைநகரங்களில் மார்ச் 4 ஆம் தேதி கண்டன ஆர்பட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் அனைத்து மாநில போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மெத்த பெட்டமைன் என்கிற போதைப்பொருளை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருளான சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து கடத்தப்படுவதாக அந்த நாட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இந்திய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், டெல்லி போலீசாரும் விசாரணை நடத்தி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு உலர் தேங்காய் பொடியில் மறைத்து, தடை செய்யப்பட்ட போதைப்பொருளான சூடோ பெட்ரினை அனுப்பி வைத்ததை கண்டுபிடித்தனர்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்-ஐ போலீசார் தேடும் செய்தி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. போதைப்பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகத்திற்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது. திமுக அரசைக் கண்டித்து மார்ச்4ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கண்டன ஆர்ப்பாட்டித்திற்கு அதிமுக மாணவர் அணி, மகளிர் அணி சார்பாக நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools