திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது என்பது பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பது போன்றது – ஆதிர் ரஞ்சனின் சர்ச்சை பேச்சு

மேற்கு வங்காள மாநிலத்தின் மூர்ஷிதாபாத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து நடந்த தேர்தல் பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

இந்த முறை 400 இடங்கள் கிடைக்காது. ஏற்கனவே பிரதமர் மோடியின் கையிலிருந்து 100 இடங்கள் நழுவிவிட்டன. காங்கிரசையும், சி.பி.ஐ(எம்)யையும் வெற்றிபெறச் செய்வது அவசியம். காங்கிரசும், சி.பி.எம்.மும் வெற்றிபெறவில்லை என்றால் மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது என்பது பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பது போன்றது. எனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதைவிட பாஜகவுக்கு வாக்களிப்பது நல்லது. ஆகவே திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காதீர்கள். காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என தெரிவித்தார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வின் குரலாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இருக்கிறார். அவர் பா.ஜ.க.வின் பி டீம் என குற்றம்சாட்டியது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools