திருமணத்திற்கு தயாரான காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் 34 வயதிலும் இன்னும் கதாநாயகியாகவே முன்னணி ஹீரோக் களுக்கு ஜோடிபோட்டு வருகிறார். அதற்கேற்ப தனது உடற்கட்டை ஸ்லிம் தோற்றத்தில் பராமரிக்கிறார். காஜல் அகர்வாலின் தங்கைக்கு திருமணமாகி குழந்தையும் இருக்கிறது. எனவே காஜலிடம் அடிக்கடி ‘உங்க கல்யாணம் எப்போது?’ என்ற கேள்வியும் சேர்ந்தே கேட்கப்படுகிறது.

சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு காஜல் பதில் அளித்தார். திருமணத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதா என்று காஜலிடம் ஒருவர் கேட்டபோது,’ திருமண உறவின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நானும் திருமணம் செய்ய தயாராகவே இருக்கிறேன். நேரம் வரும்போது அதுபற்றி அறிவிப்பேன்.

அவரது இந்த பதில் சீக்கிரமே காஜலுக்கு திருமணம் நடக்குமோ, அப்படியென்றால் மாப்பிள்ளை யாராக இருப்பார் என்ற கிசுகிசுக்களை எழுப்பி இருக்கிறது. குறும்புக்கார ரசிகர் ஒருவர் என்னை நீங்கள் திருமணம் செய்துகொள்வீர்களா என்றார். அதைக் கேட்டு டென்ஷன் ஆகாமல் காஜல் பதில் அளித்தார். கொஞ்சம் முயற்சி செய்துதான் பாருங்களேன், ஆனால் அது அவ்வளவு எளிது இல்லை என்று ரகளையாக பதில் அளித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools