X

திரைப்படங்களில் ஆண், பெண் இருவரும் சமம் தான் – மஞ்சிமா மோகன்

அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், தேவராட்டம் படங்களில் நடித்தவர் மஞ்சிமா மோகன். தற்போது அவர் களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர் படங்களில் நடித்து வருகிறார். எந்த படத்தையும் ஹீரோயின் சப்ஜெக்ட் படம், பெண்கணை மையப்படுத்திய படம் என்று குறிப்பிடாதீர்கள் என்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பொன்மகள் வந்தாள், பெண்குயின் படங்களை பெண்களை மையப்படுத்திய படங்கள் என்று குறிப்பிடுகிறார்கள் இதில் எனக்கு உடன்பாடில்லை. கதையின் மைய புள்ளியாக பெண்கள் இருந்தாலோ அல்லது ஹீரோ என்று ஒருவர் இல்லாவிட்டாலோ மட்டும் அது பெண்களை மையப்படுத்திய படம் அல்ல.

நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவும், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷாவும் இல்லை என்றால் அந்தப் படம் எப்படி முழுமை பெற்றிருக்கும். ஹீரோயின் மட்டுமே நடித்தால் அந்த படம் பெண்களை பெருமைப்படுத்தும் படமாகி விடாது. ஒரு படத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சம பங்கு இருக்கிறது. என்றார்.