திரைப்படங்கள் போல் வெப் சீரிஸுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது – நடிகர் அருண் விஜய்

இயக்குனர் ஹரி இயக்கத்தில் அண்மையில் வெளியான யானை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வெப்தொடர் தமிழ் ராக்கர்ஸ். இந்த தொடரில் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த தொடரை மனோஜ் குமார் கலைவாணன் எழுத ஏவிஎம் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் அருண் விஜய் பேசியதாவது, “என்னை எப்படி காட்டினால் சிறப்பாக இருக்கும் என்று இயக்குனருக்கு தெரியும். அதனால் அவர் இயக்குகிறார் என்றால் என்னை அப்படியே ஒப்படைத்துவிடுவேன். இந்தக் கதையை இரண்டு மணி நேரத்திற்குள் சொல்ல முடியாது. படத்தில் ஒரு நடிகராக எனக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால், வெப்சீரிஸில் சுதந்திரமாக எல்லாவற்றையும் பண்ண முடிந்தது. இந்த வெப்சீரிஸை பார்த்து பிறகு ஒரு படத்தை எடுப்பதற்குப் பின்னால் எவ்வளவு வலி இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்வார்கள். அந்த உணர்தலை இந்த சீரிஸ் நிச்சயம் ஏற்படுத்தும்” எனக் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools