தீபாவளி பண்டிகைக்கு உள்ளூர் பொருட்களை வாங்கி செல்பி எடுத்து பதிவிடுங்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்

பிரதமர் மோடி கடந்த மாதம் 29-ந்தேதி, வானொலியில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

அப்போது, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில், உள்ளூர் பொருட்களை வாங்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சுற்றுலா தலத்துக்கோ, ஆன்மிக தலத்துக்கோ எங்கு சென்றாலும் உள்ளூர் பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்தினார். இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று மீண்டும் இந்த வேண்டுகோளை விடுத்தார். அவர் தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இந்த தீபாவளிக்கு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குங்கள். அந்த பொருட்களுடனோ அல்லது உற்பத்தி செய்தவருடனோ ‘செல்பி’ எடுத்து, அதை ‘நமோ’ செயலியில் பதிவிடுங்கள்.

உங்கள் நண்பர்களையும், குடும்பத்தையும் இதில் சேர சொல்லுங்கள். நேர்மறை உணர்வை பரப்புங்கள்.

உள்ளூர் திறமைசாலிகளுக்கு ஆதரவு அளிக்கவும், சக இந்தியர்களின் படைப்புத்திறனை ஊக்கப்படுத்தவும், நமது பாரம்பரியம் செழிப்படையவும் டிஜிட்டல் ஊடகத்தை பயன்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news