X

தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் நடிகை ஜோதிகா – வைரலாகும் வீடியோ

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.

தற்போது இவர் நடிகர் மம்முட்டியுடன் ‘காதல் – தி கோர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார். உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வரும் ஜோதிகா அவ்வப்போது உடற்பயிற்சி தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ஜோதிகா தனது இணையப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அவர் தலைக்கீழாக நின்று ஒர்க்கவுட் செய்வதை பார்த்து ரசிகர்கள் பலரும் வியந்து போய் ‘வாவ்’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.