துருக்கியில் நடைபெற்ற ரஷ்யா – உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு வாரங்களைத் தாண்டியும் போர் நீடித்து வருகிறது. இருதரப்பிலும் பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு தேடி உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியா இடையே பெலாரசில் இதுவரை நடைபெற்ற மூன்று கட்ட அமைதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், துருக்கியில் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் மற்றும் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

துருக்கியில் நடந்த இந்தப் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools