துல்கர் சல்மான் படத்தின் டீசரை வெளியிடும் நடிகர் மகேஷ் பாபு

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படத்தின் டீசர் ஜூன் 28ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் இதனை வெளியிடவுள்ள பிரபலம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் தெலுங்கு டீசரை நடிகர் மகேஷ் பாபு வெளியிடவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema