தூத்துக்குடியில் இருக்கும் ஆபத்து – கனிமொழி எம்.பி எச்சரிக்கை

தூத்துக்குடியில் இருக்கும் ஆபத்து குறித்து கனிமொழி எம்.பி. விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய சோதனைகளில் 12 இடங்களில் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அபாயகரமான உலோகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

தமிழக அரசு, இப்பகுதிகளை சீர்செய்ய, வல்லுனர்களோடு ஆலோசித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நிலத்தடி நீர் மற்றும் பூமியை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி தருவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools