தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் – இந்திய அணி அறிவிப்பு

தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.

அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணி நேற்றுஅறிவிக்கப்பட்டது. சமீப காலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ராகுல் நீக்கப்பட்டதால் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்குவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

உள்ளூர் மற்றும் இந்திய ‘ஏ’ அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரரான ஷுப்மான் கில்லுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. விராட் கோலி, 2. மயாங்க் அகர்வால், 3. ரோகித் சர்மா, 4. ஷுப்மான் கில், 5. புஜாரா, 6. ரகானே, 7. ஹனுமா விஹாரி, 8. ரிஷப் பந்த், 9. விருத்திமான் சஹா, 10. அஸ்வின், 11. ஜடேஜா, 12. குல்தீப் யாதவ், 13. முகமது ஷமி, 14. பும்ரா, 15. இசாந்த் ஷர்மா.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news