தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஹசீம் ஆம்லா அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு

தென் ஆப்பிரிக்கா வீரரான ஹசீம் ஆம்லா, எஸ்.ஏ. டி20 போட்டியில் எம்.ஐ. கேப்டவுன் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஹசீம் ஆம்லா தற்போது அறிவித்துள்ளார்.

ஹசீம் ஆம்லா தென் ஆப்பிரிக்க அணிக்காக 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9,282 ரன்களை சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 46.4 ஆகும். அதேபோல் 181 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அம்லா, 8113 ரன்களை சேர்த்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 49.46 ஆகும்.

மேலும் , 44 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2019 உலக கோப்பைப் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பிறகு கவுன்டி, டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். கவுன்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாடினார். கடந்த வருடம் கவுன்டி சாம்பியன்ஷிப்பை சர்ரே அணி வென்றது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools