தெலுங்கானாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் தான் முதல்வர் – அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு

தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் நடத்தப்பட்ட பிரசாரத்தில் மத்திய மந்திரி அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார்.

பிரசாராத்தில் பேசிய அவர், “இன்று, நான் தெலுங்கானா மக்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். நீங்கள் பாஜ.க.வை ஆசீர்வதித்து, பா.ஜ.க.-வை ஆட்சிக்கு கொண்டுவந்தால், தெலுங்கானா மாநிலத்தின் பா.ஜ.க. முதல்வர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராக இருப்பார். நாங்கள் இதனை முடிவு செய்துவிட்டோம்.”

“பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் உள்ள பா.ஜ.க. கட்சியால் மட்டுமே தெலுங்கானா மாநிலத்தை முழுமையான வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்ற முடியும். பா.ஜ.க.வின் இலக்கு ஏழை, எளியோருக்கு நன்மை செய்வது மட்டும் தான். காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ்.-இன் இலக்கு அவர்களது குடும்பத்துக்கு மட்டும் நன்மை செய்வது,” என்று தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools