தெலுங்கானா ஆளுநராக டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்

தெலுங்கானா உள்பட 5 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமனம் செய்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டது. மத்திய அரசு சார்பில் இன்று வெளியான அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்..

கேரளா மாநில ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டு, ஆரிப் முகமது கான் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மகாராஷ்டிர ஆளுநராக பகத் சிங் கோஷ்பார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதேபோல், ராஜஸ்தான் மாநில ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டார். இமாசலப்பிரதேசம் மாநில ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news