தேசிய பெடரேசன் சீனியர் தடகள போட்டி – ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் 2024-ம் ஆண்டுக்கான தேசிய பெடரேசன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். 3 ஆண்டுகளில் முதன்முறையாக இந்திய மண்ணில் நடந்த போட்டியில் அவர் பதக்கம் வென்றுள்ளார்.

போட்டியின் தொடக்கத்தில் முன்னிலை பெற கடுமையாக போராடினார். 3 சுற்றுகளுக்கு பின் 2-வது இடம் பிடித்த அவர், 4-வது சுற்றில் 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து முன்னிலை பெற்றார். போட்டியில் மற்றவர்களைவிட தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில் இறுதிச்சுற்றில் அவர் விளையாடவில்லை.

இந்தப் போட்டியில் டி.பி.மானு 82.06 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools