தொடர் மழை எதிரொலி – சென்னை விமான நிலையத்தில் 22 விமானங்கள் தாமதம்

தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் 27-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று (22-ந்தேதி) அநேக இடங்களில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. இடை இடையே விட்டு விட்டு பெய்த மழை விடிய விடிய பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகள், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 12 சர்வதேச விமானங்கள் உட்பட 22 விமானங்கள் ஒரு மணிநேரம் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools
Tags: tamil news