நடிகருடன் காதலா? – நடிகை ரகுல் பிரீத் சிங் விளக்கம்

தமிழில் கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், சூர்யாவுடன் என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் பிரீத் சிங். இவர் தற்போது கமலுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் அயலான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். போதைப் பொருள் வழக்கில் அவர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தது பரபரப்பானது.

இந்நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங், நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதற்கு பதிலளித்துள்ள ரகுல் பிரீத் சிங், “நான் நடிகரை காதலிப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை. எனக்கு திருமண ஏற்பாடுகளும் நடக்கவில்லை. நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை.

தனியாகத் தான் இருக்கிறேன். எனக்கு எப்போது திருமணம் நடந்தாலும் அது பெரிய கொண்டாட்டமாக இருக்கும்” என்றார். மேலும் “தமிழ், தெலுங்கு, இந்தியில் கைநிறைய படங்கள் வைத்து நடித்து வருகிறேன். இந்த படங்கள் அடுத்த வருடம் திரைக்கு வரும்” என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools