நடிகர் ஷாருக்கானை சந்தித்த அட்லீ!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் படத்திற்காக பிரம்மாண்ட விளையாட்டு அரங்கம் ஒன்று தயாராகி வருகிறது.

விரைவில் அங்கு படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா, ஞானசம்பந்தம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக முன்னதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற சென்னை – கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது அட்லி – ஷாருக்கான் இருவரும் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன்மூலம் விஜய் படத்தில் ஷாருக்கான் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படம், தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools