நடிகை அதிதி ராவுடன் காதலா? – நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடும் நடிகர் சித்தார்த்

நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இடாகி என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக கருத்துகளை பேசி சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.

சமீப காலமாக நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது.

இந்நிலையில், நடிகர் சித்தார்த் தனது சமூக வலைதளத்தில் அதிதி ராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ‘லவ் இருக்கா? இல்லையா?’ என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நடிகை அதிதி ராவ், நடிகர் சத்யதீப் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில ஆண்டுகளிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். நடிகை அதிதி ராவின் முன்னாள் கணவர் சத்யதீப் மிஸ்ரா பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பல படங்களிலும் நடித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema