நட்பு நாடுகள் கூட எங்களை பிச்சைக்காரர்களாக பார்க்கிறார்கள் – பாகிஸ்தான் பிரதமர் வருத்தம்

பாகிஸ்தானில் நடந்த ஒரு மாநாட்டில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பேசியதாவது:-

ஏப்ரல் மாதம் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி இருந்தது. பிறகு பொருளாதார நெருக்கடியை ஒரளவு கட்டுக்குள் கொண்டு வந்தோம். ஆனாலும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது.

சிறிய நாடுகள் கூட பொருளாதாரத்தில் எங்களை விஞ்சி விட்டது. நாங்கள் கடந்த 75 ஆண்டுகளாக பிச்சை கிண்ணத்தை சுமந்து கொண்டு அலைகிறோம்.

இன்று நாங்கள் எந்த நட்பு நாட்டுக்கு சென்றாலோ அல்லது தொலைபேசியில் பேசினாலோ எங்களை பணம் கேட்டு பிச்சை எடுப்பவர்கள் போல தான் பார்க்கிறார்கள்.

இவ்வாறு அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools