நாங்க நிச்சயம் அரசியலுக்கு வருவோம் – நடிகர் விஜயின் அப்பா அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் குறித்து இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ”நான் பாஜகவில் இணையப்போகிறேனா என்ற கேள்விக்கே இடமில்லை. எனக்கென்று ஒரு அமைப்பு இருக்கிறது. ”விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும் போது அரசியல் கட்சியாக மாறும். மக்கள் அழைக்கும் போது நாங்கள் அரசியலுக்கு வருவோம்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools