நான்கு மொழிகளில் வெளியாகும் ’தி கோட் லைஃப்’ – டப்பிங் பணியை முடித்த பிருத்விராஜ்

உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட சர்வைவல் அட்வென்ச்சர் படமாக ‘தி கோட் லைஃப்- ஆடுஜிவிதம்’ திரைப்படம் மார்ச் 28-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் முடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ளதாவது, “தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி டப்பிங் முடிந்தது! இந்த முழு கதாபாத்திரத்தையும் மீண்டும் ஒரு முறை வாழ்ந்திருக்கிறேன். பின்னர் அதை 4 வெவ்வேறு மொழிகளில் மீண்டும் 4 முறை பார்த்திருக்கிறேன். எபிக் திரைப்படம் இது! நஜீப்பின் நம்பமுடியாத உண்மை கதையைக் காணத் தயாராகுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் எழுதிய இந்த நாவல் வெளிநாட்டு மொழிகள் உட்பட 12 வெவ்வேறு மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools