நான் ஒரு வேளை இறந்துவிட்டால் – எலான் மஸ்க்கின் ட்விட்டர் பதிவால் பரபரப்பு

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் டுவீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர், ‘நான் ஒருவேளை இறந்துவிட்டால், உங்களை அறிந்ததில் மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார். இந்த இணையத்தில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

இந்த டுவீட்டை பதிவிடுவதற்கு முன்னர் அவர் ரஷிய மொழியில் டுவீட் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் ‘ உக்ரைனின் சர்வாதிகாரி படைகளுக்கு ராணுவ தொலைத்தொடர்பு கருவிகளை எலான் மஸ்க் அளித்து வருகிறார். நீங்கள் என்ன தான் முட்டாள்தனமாக நடந்துகொண்டாலும் நீங்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து உக்ரைனுக்கு எலான் மஸ்க் உதவி செய்வதால் ரஷிய படைகள் அவருக்கு மிரட்டல் விடுத்திருக்க வேண்டும். அதனால் அவர் இறந்துவிடலான் என ட்விட் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைகோள் மூலம் அந்நாட்டிற்கு ப்ராட்பேண்ட் சேவையை மஸ்க் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools