X

நான் செய்த பெரிய தவறு! – புலம்பும் நட்டி நட்ராஜ்

பிரபல ஒளிப்பதிவாளரான நட்டி நட்ராஜ், மிளகாய், சதுரங்க வேட்டை, எங்கிட்ட மோததே, போங்கு ஆகிய படங்களில் நடித்து மிகவும் நடிகராக பிரபலமானார். தற்போது ‘சண்டி முனி’ படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக மனிஷா யாதவ் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், என் வாழ்க்கையில் ஜீவா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினதுதான் தவறான முயற்சி. இதற்கு காரணம் சுசீந்திரன். இயக்குனர் சுசீந்திரனும், அவரது மேனேஜர் ஆண்டனியும் என்னை ஏமாற்றி விட்டார்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

பல வெற்றி படங்களை இயக்கிய சுசீந்திரன் விஷ்ணு விஷாலை வைத்து ‘ஜீவா’ என்ற படத்தை இயக்கினார். இதில் ‘ஒரு ரோசா…’ என்ற ஒரு பாடலுக்கு நட்டி நட்ராஜ் நடனம் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.