நான் சேவை செய்வதற்காக பிறந்தவன் – பிரதமர் மோடி பேச்சு

சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளுக்கு இன்று முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 2-வது கட்டத்தேர்தல் 70 தொகுதிகளுக்கு வருகிற 17-ந்தேதி நடைபெற இருக்கிறது. 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் சர்குஜா பகுதியில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, பழங்குடியினருக்கு செலவு செய்யும் பணம் வீண் என நினைத்தது. பழங்குடியின மக்களின் குடும்பத்தில் இருந்து ஒருவர் ஜனாதிபதியாக வரலாம் என யாராவது ஒருவர் நினைத்தார்களா? நான் சேவை செய்வதற்காக பிறந்தவன். நான் சேவை செய்வதற்காக நீங்கள் எனக்கு பணியை கொடுத்துள்ளீர்கள்.

காங்கிரஸ் ஆட்சியில் மனித கடத்தல், போதைப்பொருள் தொழில் சர்குஜா பகுதியில் அதிகமாக இருந்தது. காங்கிரசின் சமரசம் செய்துகொள்ளும் கொள்கையால், சத்தீஸ்கரின் சர்குஜா பகுதியில் பண்டிகைகளைக் கொண்டாடுவது கடினமாகிவிட்டது. சத்தீஸ்கரில் மாவோயிஸ்டை கட்டுப்படுத்த காங்கிரஸ் தவறிவிட்டது.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news