நான் தவறாக கணித்து விட்டேன் என்பதை பும்ரா நிரூபித்துவிட்டார் – கபில் தேவ்

‘யார்க்கர்’ ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்படும் பும்ரா ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் அபாரமாக பந்து வீசி வந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடர் மூலம் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தன்னுடைய அபார பந்து வீச்சை வெளிப்படுத்தி 2018-ல் வெளிநாட்டு மண்ணில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனைப் படைத்துள்ளார்.

இந்நிலையில் பும்ரா குறித்த என்னுடைய கணிப்பு தவறாகிவிட்டது என கபில் தேவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கபில் தேவ் கூறுகையில் “நான் தவறாக கணித்து விட்டேன் என்பதை பும்ரா நிரூபித்துவிட்டார். நான் அவரை முதன்முறையாக பார்க்கும்பொழுது, அவர் பந்து வீசும் முறையை வைத்து நீண்ட நாட்களாக சர்வதேச போட்டியில் சாதிக்க இயலாது என்று கணித்தேன். ஆனால் பும்ரா சிறப்பாக பந்து வீசினார். அவருக்கு தலை வணங்குகின்றேன். ஆஸ்திரேலியாவில் சிறப்பாக பந்து வீசி வரும் அவரை உண்மையிலேயே பாராட்டுகிறேன். அவரது மனநிலை மிகவும் வலிமையாக உள்ளது.

பும்ரா மிகவும் அற்புதமானவர். குறைந்த தூரத்தில் இருந்து ஓடிவந்து அவரால் 140 கிலோ மீட்டருக்கும் அதிகமாக வேகத்தில் பந்து வீச முடியும் என்றால், நாம் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். பும்ரா ஸ்பெஷலான தோள்பட்டையை பெற்றுள்ளார். இதுபோன்ற பந்து வீச்சாளர்கள் சிறப்புக்குரியவர்கள். புதிய மற்றும் பழைய பந்தில் சிறப்பாக பந்து வீசுகிறார். எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சிறப்பான பவுன்சர்களை வீசுகிறார்” என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools