X

நியூசிலாந்தில் ஹாஸ்டலில் ஏற்பட்ட தீ விபத்து – 6 பேர் பலி

நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டனில் 4 மாடிகள் கொண்ட ஹாஸ்டல் அமைந்துள்ளது. இந்த ஹாஸ்டலில் இன்று திடீரென தீ பற்றியது. இந்த தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

பிரதம மந்திரி கிறிஸ் ஹாப்கின்ஸ் தீ விபத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹாஸ்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் பலியானது அப்பகுதியில் சோகட்தை ஏற்படுத்தியுள்ளது.