நோட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாப்போம் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் ‘‘அமெரிக்கா மற்றும் எங்களுடைய கூட்டாளி நாடுகள் நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் முழு படைபலத்துடன், எங்களுடைய ஒன்று சேர்ந்த பலத்தால் பாதுகாப்போம்.

உக்ரைன் மக்கள் தைரியத்துடன் சண்டையிட்டு வருகிறார்கள். சண்டையில் புதின் ஆதாயம் அடையலாம். ஆனால், நீண்ட காலத்திற்கு அவர் அதற்கான அதிகப்படியான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். உக்ரைன் மக்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது’’ என்றார்.

முன்னதாக,  சர்வாதிகாரிகள் அவர்கள் செய்த ஆக்கிரமிப்பு செயலுக்கு விலை கொடுக்காதபோது அவர்கள் மேலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனர் என்பதை நமது வரலாற்றின் மூலம் நாம் அறிந்துள்ளோம். அவர்கள் தொடர்ந்து முன்னேறி கொண்டே சென்று அமெரிக்கா மற்றும் உலகிற்கு அதிக செலவு, அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடுகின்றனர். புதினின் போர் திட்டமிடப்பட்ட மற்றும் தூண்டப்படாதது. ராஜாங்க ரீதியிலான முயற்சிகளை புதின் நிராகரித்துவிட்டார்.

மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என புதின் நினைத்துவிட்டார். புதின் தவறாக நினைத்துவிட்டார்’’ எனத் தெரிவித்திருந்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools