பச்சோந்தி போல் நிறம் மாறும் சேலை – தயாரிப்பு செலவு ரூ.2.80 லட்சம்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் நல்ல விஜய். இவர் விதவிதமான சேலைகளை தயாரித்து வருகிறார். கடந்த காலங்களில் இவர் மணம் வீசக்கூடிய சேலைகளை தயாரித்தார். இதற்காக மூலிகைகளை பயன்படுத்தினார். மேலும் ஊசி முனையில் நுழையக்கூடிய புடவை ஒன்றையும் உருவாக்கி சாதனை படைத்தார்.

இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இவரிடம் பச்சோந்தி போல நிறம் மாறக்கூடிய சேலை செய்ய அணுகினார். இதனை தொடர்ந்து விஜய் ரூ.2.80 லட்சம் செலவில் நிறம் மாறக்கூடிய சேலை ஒன்றை தயாரித்தார். இந்த சேலையை தயாரிக்க 30 கிராம் தங்கம் மற்றும் 500 கிராம் வெள்ளியை உருக்கி கலவையாக சேர்த்துள்ளார்.

பகல், இரவு மற்றும் மின் வெளிச்சத்திற்கு ஏற்றபடி இந்த புடவை 3 விதமான நிறங்களில் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் என தெரிவித்தனர். பச்சோந்தி போல நிறம் மாறக்கூடிய சேலை வெகுவாக கவர்ந்துள்ளது. அவரிடம் தொழிலதிபர் ரூ.2.80 லட்சம் கொடுத்து சேலையை பெற்றுக் கொண்டார். விஜய் தற்போது ரூ.25 லட்சம் மதிப்பில் ஒரு சேலையை நெசவு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news