படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று மும்பை புறப்பட்டு சென்றார்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 34 நாட்கள் நடைபெற்ற ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவயடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது.
இந்நிலையில் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று மும்பைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

இதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையித்தில் இருந்து விமானம் மூலம் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools