பணியின் போது ரெயில் என்ஜின் ஒட்டுநர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை

ஒடிசா ரெயில் விபத்தில் 288 பயணிகள் பலியானது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தெற்கு ரெயில்வேயில் மதுரை கோட்டத்தில் பணியின் போது ரெயில் என்ஜின் டிரைவர்கள் ‘ஸ்மார்ட் வாட்ச்’ அணிய தடை விதித்து அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து ரெயில்வே வட்டாரத்தினர் கூறியதாவது:-

தற்போது ‘ஸ்மார்ட் வாட்ச்’ பயன்பாடு அதிகரித்துள்ளதால் ‘புளூ டூத்’ மூலம் வாட்சில் கனெக்ஷன் ஏற்படுவதால் அதில் அழைப்புகள் வந்தால் தெரிந்துவிடும். மேலும் சில ‘ஸ்மார்ட் வாட்ச்’கள் ‘போர்ட்டபிள் மீடியா பிளேயர்’களாக செயல்படுகின்றன.

எப்.எம். ரேடியோ மற்றும் புளூடூத் ஹெட்செட் வழியாக டிஜிட்டல் ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை இயக்குகின்றன. இதனால் ‘ஸ்மார்ட் வாட்ச்’ அணிந்து பணியாற்றுகிற போது இதுபோன்ற காரணங்களால் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் ரெயில் வேகமாக செல்லும்போது கவன சிதறல் ஏற்பட்டால் விபரீதமாகிவிடும். அதனால் இந்த உத்தரவை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவு சென்னை கோட்டத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி அடுத்தடுத்து நடைமுறைப்படுத்துவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news